
ஆகஸ்ட்,15 - 2009 இந்தியா அரசியல் ரீதியில் விடுதலை பெற்று 62 ஆண்டுகள் நிறைவு பெற்று விட்டன;ஆனால், வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம்,குடிநீர் சாலைகள் மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளின்மை, அறியாமை,இலஞ்சம், ஊழல், மத வெறி, ஜாதி வெறி, மனிதர்களுக்குள் உயர்வு தாழ்வு கற்பிக்கும் அறிவீனம் போன்ற தளைகளிலிருந்து நாட்டு மக்களுக்கு இன்னமும் விடுதலை கிடைக்கவில்லை. பயங்கரவாதமும் பிரிவினைவாதமும் நாட்டை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. மகாத்மா காந்தி நடத்திய அஹிம்சா போராட்டத்தின் விளைவாக மட்டும் நாட்டிற்கு விடுதலை கிடைத்திடவில்லை; நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், மாவீரன் பகத்சிங், வீர சாவர்க்கர், திலகர் போன்றோர் நடத்திய வீரம் செறிந்த போராட்டங்களும், ஆயிரக்கணக்கான மக்கள் சிந்திய இரத்தமும், தூக்குக் கயிற்றை முத்தமிட்ட நூற்றுக்கணக்கான மாவீரர்களின் தியாகமும் நாம் விடுதலை பெற காரணமாக அமைந்தன.போராடிப் பெற்ற விடுதலையைப் பேணிக்காக்க வேண்டியது நம் அனைவரின் கடமையுமாகும்.சீன, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்தியாவை சீர்குலைக்க பல்வேறு சதி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றன்; இவர்களது இந்த சதி வேலைகளுக்கு, சித்தாந்தத்தையும் மதத்தையும் காரணம் காட்டி நமது நாட்டிற்குள்ளேயே சில தீய சக்திகள் உதவி வருகின்றன. விழிப்புடன் இருக்க வேண்டியது ஒவ்வொரு இந்தியனின் கடமை. நாட்டில் நிலவும் அவலங்களுக்கு எதிராகவும் நாட்டிற்கெதிரான தீய சக்திகளை அழித்தொழிக்கவும் நம்மால் இயன்ற வழிகளில் நாம் தொடர்ந்து போராடுவோம். பாரத நாடு பார்க்கெலாம் திலகம்; நாமதன் புதல்வர்; இந்நினைவகற்றோம்.
அனைவருக்கும் இனிய விடுதலைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment