Thursday, March 26, 2009
இது ஒரு அவமானம்
ஐ.பி.எல் 20/20 கிரிக்கெட் போட்டிகளை தென்னாப்பிரிக்காவில் நடத்துவது என்று கிரிக்கெட் வாரியம் முடிவு செய்திருக்கிறது. இம்முடிவு வெறும் பணத்தை மட்டுமே குறிக்கோளாய் கொண்டு வாரியம் செயல்படுவதை எடுத்துக் காட்டுகிறது. நாட்டில் பொதுத் தேர்தல்கள் நடைபெறுகிற காலகட்டத்தில் போட்டிகளை ஏற்பாடு செய்து விட்டு பின்பு அரசிடமிருந்து பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான உத்தரவாதம் கிடைக்கவில்லை என்று கூறி போட்டிகளை வெளி நாட்டில் நடத்த ஏற்பாடு செய்திருப்பது நாட்டுக்கு அவமானகரமான விஷயம். தேர்தல் முடிந்த பிறகு நடத்தும் வகையில் போட்டிகளை வாரியம் தள்ளி வைத்திருக்க வேண்டும்.மத்திய அரசும் இவ்விசயத்தில் சொதப்பியிருக்கிறது.போட்டிகளை வெளி நாட்டில் நடத்த அனுமதியளித்திருக்கக் கூடாது. கோடிகளை விட நாட்டின் கௌரவம் முக்கியம் என்பதை வாரியம் உணர்ந்து கொள்ள வேண்டும்; அரசு அதை வாரியத்திற்கு உணர்த்தியிருக்க வேண்டும். இந்திய கிரிக்கெட் வாரியமே இந்தியாவில் பாதுகாப்பில்லை என்று கூறி வெளிநாட்டில் விளையாட்டுப் போட்டிகளை நடத்தினால் மற்ற நாட்டு கிரிக்கெட் குழுக்கள் எப்படி இந்தியாவில் கிரிக்கெட் விளையாட வரும்..? நடைபெறவிருக்கின்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள மற்ற நாட்டு விளையாட்டு வீரர்கள் எப்படி இந்தியா வர துணிவு கொள்வார்கள்..? உலக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவிருக்கின்ற இக்கால கட்டத்தில் இதுபோன்றதொரு நிலை உருவாக்கப்பட்டிருப்பது வருந்தத்தக்கது.இந்தியா ஒரு பாதுகாப்பற்ற தேசம் என்ற ஒரு செய்தியை இந்திய கிரிக்கெட் வாரியமே உலகுக்கு அறிவித்திருப்பதும் அதை இந்திய அரசும் மௌனமாய் அனுமதித்திருப்பதும் நாட்டை கேவலப்படுத்துகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment