
நாட்டின் உயர்ந்த தலைவர்; ஈடு இணையற்ற தலைவர்;குடும்ப நலனை விட மக்கள் நலனை பெரிதாக நினைத்தவர்; ஏழைகளுக்காகவே, அவர்களது நலனுக்காகவே தனது வாழ்வை அர்ப்பணித்த மாபெரும் தலைவர்; நாட்டின் விடுதலைக்காக சுமார் 10 ஆண்டுகள் சிறையில் இருந்தவர்; சுமார் 10 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக இருந்து,தமிழகத்தை பல வகையிலும் முன்னேற்றியவர்; இலஞ்சம் ஊழல் என்றால் என்னவென்றே தெரியாது ஆட்சி செய்தவர்; தனக்கென்றோ தனது குடும்பத்திற்கென்றோ ஒரு பைசா கூட சொத்து சேர்க்காதவர்; திருமணமே செய்து கொள்ளாமல், தனது வாழ்க்கையை நாட்டிற்காகவும் நாட்டு மக்களுக்காகவும் தியாகம் செய்தவர்; பிரதமர் பதவியே தன்னை நாடி வந்த போதும் கூட பதவியை நாடாது மக்கள் சேவையை நாடியவர்;இவர் போல் ஒரு தலைவர் இந்த நாட்டில் இனி தோன்ற மாட்டாரா என்று மக்கள் இன்றும் ஏங்குமளவுக்கு பெருமை கொண்டவர்; மாபெரும் தலைவர்; ஈடு இணையற்ற தலைவர்; சரித்திரம் காணாத, இனியும் காண முடியாத அப்பழுக்கற்ற தலைவர்; அவர் பிறந்த தமிழ் நாட்டில் நாமும் வாழ்கிறோம் என்பதே நமக்கு பெருமை; ஒரு நல்ல தலைவர்; திறமை வாய்ந்த தலைவர்; பெருமை மிக்க தலைவர்; சிறப்பு வாய்ந்த தலைவர்; உண்மையான தலைவர்; எளிமையான தலைவர் என்ற அனைத்தும் சேர்ந்த ஒரு வடிவம் காமராஜ். காமராஜர் ஒரு சரித்திரம்; ஒரு தியாக வரலாறு; பாரதத்தின் உண்மையான ரத்னா. ஜூலை 15. அவரது பிறந்த தினம்; அவரை நாம் என்றும் மறவாதிருப்பதே நாம் நாட்டுக்கு செய்யும் மிகப் பெரும் தொண்டு.